அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பர்மாங்க் பகுதியில் ஹாலிவுட்டின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்சின் ஸ்டூடியோ உள்ளது.
இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கலையகத்தின் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு தீ பரவியது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.