நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான தற்போதைய அதிகபட்ச சம்பள வரம்பை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சுகாதாரம் உள்ளிட்ட பல அத்தியாவசிய சேவைகளில் தற்போது நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்கும் நோக்கில், வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த அதிகபட்ச சம்பள வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு முதல் ஊழியர்களின் சம்பளத்தை 4.5 சதவீதம் உயர்த்த நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக சுமார் 600 மில்லியன் டாலர்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, நியூ சவுத் வேல்ஸில் அதிகபட்ச ஊதிய உயர்வு 2.5 சதவீதமாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி இந்த சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.