பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் , ஏ.ஆர்.ரகுமான் இசையில் , உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் 29-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மாமன்னன் பட வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளது. இந்த நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்கள் எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை, விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.