Newsபுவி வெப்பமடைவதை குறைக்க புதிய முயற்சி - அமெரிக்கா அறிவிப்பு

புவி வெப்பமடைவதை குறைக்க புதிய முயற்சி – அமெரிக்கா அறிவிப்பு

-

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், ‘காலநிலை மாற்றங்களிலிருந்து நமது பூமியை காப்பாற்ற சூரிய ஒளியை எவ்வாறு தடுப்பது’ என்பது குறித்து ஆராய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகம், சூரிய புவி-பொறியியல் குறித்த அறிக்கையை வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், புவி வெப்பமடைதலை விரைவுபடுத்துவது சூரியக் கதிர்கள்தான் என்பதால், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை ஒரு குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய புவி பொறியியல் ஆராய்ச்சி குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக 2022 ஆம் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய ஆராய்ச்சிகள் குறித்து அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளவை பின்வருமாறு,

பூமியின் சிக்கலான அமைப்புகள் குறித்து வளர்ந்து வரும் புரிதலின் அடிப்படையில், இவற்றினால் ஏற்படப்போகும் நன்மைகள் மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள ஒரு ஆராய்ச்சிக்கான தேவை இருக்கிறது.

சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும் விண்வெளிக்கு திருப்புதல், சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் வகையில் கடல் மேகங்களை பிரகாசமாக்குதல், சிரஸ் மேக ஆய்வு போன்ற வழிமுறைகள் குறித்து ஆராயப்படுகிறது.

இந்த ஆராய்ச்சியானது, தொழில்நுட்பங்களை காட்டிலும், ‘சூரிய கதிர்வீச்சு மாற்றியமைத்தல் முறைகள்’ ((Solar Radiation Modification) ஏற்படுத்தப்போகும் தாக்கங்களைப் பற்றிய ஒரு புரிதலை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது.

இதன் பெரும்பகுதி அடிப்படை காலநிலை செயல்முறைகள் மற்றும் ‘மனித கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள்’ (Human Greenhouse Gas Emissions) ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்தும், காலநிலைக் கொள்கையின் ஒரு அங்கமாக சூரிய கதிர்வீச்சு மாற்றியமைத்தல் முறைகள் விளைவிக்கக் கூடிய அபாயங்கள் மற்றும் நன்மைகள் ஆகியவற்றை குறித்தும் சிறந்த முடிவுகளை செயல்படுத்த வழிவகுக்கும்.

வரும் காலங்களில், பொது அல்லது தனியார் நிறுவனங்களால் இந்த வழிமுறை (SRM) பயன்படுத்தப்படுவதற்கு அமெரிக்காவை தயார்படுத்தவும் உதவும். இதன் மூலம் சில வருட காலங்களுக்கு நமது கிரகமான பூமியை கணிசமாக குளிர்விக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஏன அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...

ஆஸ்திரேலியா சுதந்திரமாக இருக்க வேண்டும் – அல்பானீஸ் வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியா அமெரிக்காவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற முயற்சிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது உரையில் தெளிவுபடுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்று சிட்னியில் ஒரு முக்கிய...