மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிட சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்யும் Oceangate நிறுவனம், அந்த சுற்றுப்பயணங்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.
கடந்த 03 வாரங்களுக்கு முன்னர் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து சிதறியதில் 05 பேர் உயிரிழந்த அவலமே இதற்கு பிரதான காரணமாகும்.
இந்த சம்பவத்திற்குப் பிறகும், Oceangate நிறுவனம் கடலுக்குள் பயணங்களை ஏற்பாடு செய்து விளம்பரங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதன்படி, கடந்த வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வர்த்தக மற்றும் ஆய்வு பயணங்களையும் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கான ஒரு நபருக்கு $250,000 செலவாகும்.