Newsமனைவியை கொலை செய்து மூளையை சாப்பிட்ட கொடூர நபர்

மனைவியை கொலை செய்து மூளையை சாப்பிட்ட கொடூர நபர்

-

மனைவியை கொலை செய்து மூளையை சாப்பிட்ட மெக்சிகோவை சேர்ந்த கொடூர மிருக மனிதன் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்த அல்வாரோ (32) என்பவர், ஜூன் 29 அன்று தடை செய்யப்பட்ட ஒரு போதைப்பொருளின் மயக்கத்தில் தனது மனைவியை கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவின் கிழக்கு-மத்திய பகுதியில் உள்ள பியூப்லா நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்ட அல்வாரோ, தனது மனைவியை கொலை செய்தது மட்டுமல்லாமல், அவரது மூளையை டாக்கோ எனப்படும் மெக்சிகோ நாட்டு உணவில் வைத்து சாப்பிட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

பிசாசு அவரை இக்குற்றத்தை செய்யும்படி கட்டளையிட்டதாக பொலிஸாரிடம் அல்வாரோ வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.

மரியா மாண்ட்செராட் (38) என்பவரை அல்வாரோ ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் செய்திருந்தார். அவருக்கு 12 முதல் 23 வயது வரையிலான 5 மகள்கள் இருந்தனர்.

அல்வாரோ தனது மனைவியின் மூளையின் ஒரு பகுதியை டாக்கோவில் வைத்து சாப்பிட்டதாகவும், மரியாவின் உடைந்த மண்டையோட்டை சிகரெட் சாம்பலிடும் தட்டாக பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

பிறகு மரியாவின் உடலை துண்டாக்கி பிளாஸ்டிக் பையில் வைத்துள்ளார். கொலை நடந்த 2 நாட்களுக்கு பிறகு, அல்வாரோ தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள அவரது வளர்ப்பு மகள்களில் ஒருவரை அழைத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

இன்று முதல் விக்டோரியர்களுக்கு Pill Testing பரிசோதனை

இன்று முதல் ஜனவரி 1ம் திகதி வரை 4 நாட்களுக்கு, சட்டப்படியான அனுமதியுடன் விக்டோரியாவில் முதல் முறையாக Pill Testing நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விக்டோரியாவில் நடக்கவிருக்கும் Beyond...

உலகிலேயே அதிகம் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியுள்ள பிரபல நாடு

உலகில் அதிக சதவீத மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி உள்ளனர். அதனை அடிப்படையாகக் கொண்டு அதிகம் எந்த நாடுகளின் மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்ற தரவரிசை...

உலகில் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

உலகில் ஊழல் குறைவாக உள்ள நாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த தரவரிசை "Global Index" மூலம் செய்யப்படுகிறது. இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு 14வது இடம் கிடைத்துள்ளது சிறப்பம்சமாகும். அதன்படி...

அவுஸ்திரேலியாவில் நேற்று காலை இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி பலி

NSW இல் Yamba அருகே இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காலை 11.20 மணியளவில் யம்பாவிலிருந்து 8 கிமீ மேற்கே உள்ள பால்மர்ஸ்...

உலகையே உலுக்கிய தென்கொரியா விமான விபத்தில் 179 பேர் பலி

தென் கொரியாவில் உள்ள விமான நிலையத்தில் 181 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 179 பேர் பலியாகினர். விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில்...

தென் கொரியாவில் விமான விபத்து -23 பேர் பலி!

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 23 பேர் உயிரிழந்தனர் என...