Newsசூரியனுக்கு மிக அருகில் நெருங்கிய நாசாவின் விண்கலம்

சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிய நாசாவின் விண்கலம்

-

பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் ஆற்றலுக்கான ஆதாரமாக விளங்கும் சூரியனை ஆய்வு செய்வதற்கு நீண்ட காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சூரியனை மிக அருகில் சென்று ஆராயும் வகையில் ‘பார்க்கர்’ என்ற விண்கலத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12 ஆம் திகதி விண்ணில் ஏவியது.

சூரியனில் இருந்து வெளிவரும் வெப்ப புயலுக்கான ஆதாரம், காந்த அலை செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆராய அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கடந்த ஜூன் 27 ஆம் திகதி 5.3 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் சென்றதாக நாசா தெரிவித்துள்ளது.

இதுவரை சூரியனை நெருங்கிச் சென்றதிலேயே மிக நெருக்கமான தூரம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்த மாதம் 21 ஆம் திகதி வீனஸ் கிரகத்தின் ஈர்ப்பு சக்தியோடு ‘பார்க்கர்’ விண்கலம் 4.5 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் செல்லவுள்ளது.

தற்போது சூரியனின் வெப்ப அலை பகுதியை நெருங்கிய போதும் பாதிப்பின்றி செயல்பட்டு வரும் இந்த விண்கலம், அடுத்த மாதம் 4.5 மில்லியன் மைல் அருகில் சென்றும் பிரச்சினை இன்றி செயல்பட்டால், சூரியனின் ஆற்றலுக்கான ஆதாரம் மற்றும் செயல்பாடுகளை அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

2026 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பாலியல் குறித்த புதிய கேள்விகள்

ஆஸ்திரேலியாவின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இந்த முறை, பாலினம் தொடர்பான...

விமான விபத்து காரணமாக மூடப்பட்ட விமான நிலையம்

விமான விபத்து காரணமாக லண்டன் Southend விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு இலகுரக விமானம் ஈடுபட்டதாகவும், புறப்பட்ட...

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கடுமையான வேலை வெட்டுக்கள்

டிரம்ப் நிர்வாகம் 1,000க்கும் மேற்பட்ட வெளியுறவுத்துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதன்படி, 1,107 அரசு ஊழியர்களும் 246 வெளிநாட்டு சேவை ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின்...

தீங்கு விளைவிக்கும் பாசிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரத்தில் பல்வேறு இடங்களில் தீங்கு விளைவிக்கும் பாசிகள் பூப்பது சுற்றுலாப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Port River உட்பட கடற்கரையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட...

தீங்கு விளைவிக்கும் பாசிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரத்தில் பல்வேறு இடங்களில் தீங்கு விளைவிக்கும் பாசிகள் பூப்பது சுற்றுலாப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Port River உட்பட கடற்கரையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட...

ஆசிய வர்த்தகத்தின் மீது திரும்பிய ஆஸ்திரேலியாவின் கவனம்

அமெரிக்காவின் வரி நெருக்கடி காரணமாக ஆசிய வர்த்தகத்தில் கவனம் செலுத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ஆசிய நாடுகளுக்கு நம்பகமான பங்காளியாக ஆஸ்திரேலியா இருக்க விரும்புவதாகவும், பொருளாதார உறவுகளை...