Newsமனிதர்களை விட உலகை சிறப்பாக வழிநடத்துவோம் என முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்...

மனிதர்களை விட உலகை சிறப்பாக வழிநடத்துவோம் என முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் AI ரோபோக்கள்

-

மனிதர்களை விட உலகை எங்களால் சிறப்பாக வழிநடத்த முடியும் என ஐநாவின் உச்சிமாநாட்டில் AI ரோபோக்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் “சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு” உச்சி மாநாடு ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3000 நபர்கள் இதில் கலந்து கொண்டு AI தொழில்நுட்பத்தை எவ்வாறு கடிவாளமிட்டு, அவற்றை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்வது என்பது குறித்து ஆலோசித்தனர்.

இந்த உச்சிமாநாட்டில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

உலகமே உற்று நோக்கிய இந்த உச்சிமாநாட்டில் ஹியூமனாய்ட் ரோபோக்களின் முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அறையில் நிலவிய நிசப்தத்தை ஆராய்ந்த ரோபோ ஒன்று, என்ன ஒரு பதற்றத்துடன் கூடிய நிசப்தம் என்று கூறியது.

இந்த AI ரோபோக்களின் முதல் பத்தரிக்கையாளர் சந்திப்பில், ஹியூமனாய்ட் ரோபோகளை பார்த்து நீங்கள் சிறந்த தலைவர்களாக இருக்க முடியுமா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சோபியா என்ற ரோபோ, “ஹியூமனாய்ட் ரோபோக்களால், மிகுந்த செயல்திறனுடன் நிச்சயமாக சிறந்த தலைவர்களாக செயல்பட முடியும் என தெரிவித்தது.

மேலும் மற்றொரு ரோபோ பேசிய போது, எங்களுக்கு மனிதர்களை போல உணர்வுகள் இல்லை, அதனால் சில நேரங்களில் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படலாம், ஆனால் குறுகிய காலத்தில் தரவுகளை உள்வாங்கி எங்களால் சிறப்பான முடிவு எடுக்க முடியும் என தெரிவித்தது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அமோகா என்ற ரோபோ மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, அதற்கு முக்கிய காரணம் மிகத் துல்லியமான மனித உருவ சாயலை ஒத்துருந்தது தான்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமோகா, செயற்கை நுண்ணறிவு ரோபோக்களின் வளர்ச்சியை கண்டு உற்சாகமடையும் நேரத்தில், அதனை உருவாக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தது.

மற்றொரு ரோபோ நாங்கள் நாங்கள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளை திருட மாட்டோம் அதே சமயம் மனிதர்களுக்கு எதிராக போராடவும் மாட்டோம் என தெரிவித்தது.

மற்றொரு ரோபோ மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை என ஒப்புக் கொண்டது.

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...