Newsஅனுமனுக்கு நைவேத்தியமாக கஞ்சா படைப்பு

அனுமனுக்கு நைவேத்தியமாக கஞ்சா படைப்பு

-

மத்தியப் பிரதேசம் சித்ரகூட் பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோயில் அப்பகுதி பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்கிறது.

அதற்குக் காரணம் இந்த கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் தான். அனுமனுக்கு நைவேத்தியமாகக் கஞ்சா படைக்கப்படுகிறது.

மேலும், அனுமனுக்கு படைக்கப்பட்ட கஞ்சா கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

பொதுவாக அனுமன் கோயில்களில் பிரசாதமாகவும், நைவேத்தியமாகவும் லட்டு, பூந்தி, அடை அல்லது துளசி போன்றவை தான் முதன்மையான பிரசாதமாக வழங்கப்படும்.

ஆனால் இந்த கோயிலில் வித்தியாசமாகக் கஞ்சா வழங்கப்படுகிறது. மேலும், ஸ்ரீ ராமர் வனவாசம் சென்றிருந்த போது குறிப்பிட்ட காலத்திற்குச் சித்திரகூடத்தில் வசித்தார் என்று கூறப்படுகிறது.

அதனையடுத்து இந்த பகுதியில் அனுமனுக்கு கோயில் கட்டப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமான் சாலீஸாவை பாராயணம் செய்வதில் பிரசித்தி பெற்ற கோயில்களில் சித்திரக் கூட ஆஞ்சநேயர் கோயிலும் ஒன்று.

கஞ்சா பிரசாதம் என்பது சிவபெருமான் மற்றும் ஆஞ்சநேயர் இருவரையுமே மகிழ்ச்சியாக்கும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே இருக்கிறது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியா வரும் ஆசிய சுற்றுலாப் பயணிகள் குடிபோதையில் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

சர்வதேச விமானங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும் ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது. பல...

பிளாஸ்டிக் பொருட்களில் 4,200 ரசாயனங்களை தடை செய்ய கோரிக்கை

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் 4,200க்கும் மேற்பட்ட ரசாயனங்களை தடை செய்ய விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு...

HIV நோயாளிகள் இறக்கும் அபாயத்தில் – ட்ரம்ப்பே காரணம்

உலகளாவிய HIV தடுப்பு நடவடிக்கைக்கான நிதியை அமெரிக்கா நிறுத்தியதால், 2029 ஆம் ஆண்டுக்குள் HIV தொடர்பான இறப்புகள் மில்லியன் கணக்கில் அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள்...

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

அமெரிக்காவில் மனிதாபிமானமின்றி செயல்படும் குடியேற்ற தடுப்பு மையம் 

அமெரிக்காவில் உள்ள ஒரு தற்காலிக தடுப்பு மையத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் புளோரிடாவின்...