Newsநடுக்கடலில் தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள்

நடுக்கடலில் தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள்

-

பிரித்தானியாவுக்குச் சொந்தமான தீவு ஒன்றில், ஒன்றரையாண்டுகளுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களைக் குறித்த பதறவைக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், கனடாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டுள்ளது.

ஆனால், அவர்கள் பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்படாமல், பிரித்தானியாவில் கடல் கடந்த பிரதேசமான Diego Garcia என்னும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த சம்பவத்தைக் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினாலும், பின்னர் பரபரப்பெல்லாம் அடங்கிப்போனது. அந்தத் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் ஒன்றரையாண்டுகள் ஆனபிறகும் அங்கேயேதான் இருக்கிறார்கள்.

நிலைமை மோசமானதே தவிர, நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அந்த மக்கள் இலங்கையில் சந்தித்த துன்புறுத்தல்களுக்குத் தப்பித்தான் படகில் புறப்பட்டார்கள். ஆனால், இலங்கையிலிருந்து வெளியேறியும் துன்புறுத்தல்களிலிருந்து அவர்கள் தப்பமுடியவில்லை.

குறைவான இடத்தில், ஒரே கூடாரத்துக்குள் பலர் தங்க வைக்கப்பட்டிருக்க, ஆண்கள் சிலர் தாக்குதல்களுக்கும், பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாகியுள்ளார்கள்.

Latest news

Coles கடைகளில் இன்று முதல் கத்தி விற்பனைக்கு தடை

ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Coles-இல் இனி கத்தி விற்பனையை நிறுத்தியுள்ளது. 13 வயது சிறுவன் ஊழியர் ஒருவரை குத்தியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள Coles...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. வெளிநாட்டு தாக்கங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் அச்சுறுத்தலுக்கு...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...