மருத்துவ கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் 2 முக்கிய மருந்துகளை பரிந்துரைப்பதற்கான கூடுதல் அதிகாரங்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்க மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதுவரை 10 சதவீத நிபுணர்கள் மட்டுமே உரிய மருந்துகளை பரிந்துரைக்க அனுமதிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், மருத்துவ கருக்கலைப்பு முறையை இலகுபடுத்தும் நோக்கில் இந்த புதிய தீர்மானம் அமுல்படுத்தப்படும் என மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இதற்கு பல மருத்துவ மற்றும் செவிலியர் சங்கங்கள் பாராட்டு தெரிவித்திருப்பது சிறப்பு.
ஆஸ்திரேலியப் பெண்களில் மூன்றில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு கருச்சிதைவையாவது அனுபவிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.