Newsசூரியனை நெருங்கியுள்ள நாசாவின் 'பார்க்கர்' விண்கலம்

சூரியனை நெருங்கியுள்ள நாசாவின் ‘பார்க்கர்’ விண்கலம்

-

2018 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பார்க்கர் நாசா விண்கலம், சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்றதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியிலுள்ள சகல உயிரிகளின் ஆற்றலுக்கான ஆதாரமாக விளங்கும் சூரியனை ஆய்வு செய்வதற்கு , நீண்ட காலமாகவே முயற்சிகள் மேற்டிகள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆராயும் வகையில் ‘பார்க்கர்’ என்ற விண்கலத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12 இல் விண்ணில் ஏவியது.

சூரியனிலிருந்து வெளிவரும் வெப்ப புயலுக்கான ஆதாரம் காந்த அலை செயற்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆராய அனுப்பப்பட்ட இவ்விண்கலம் கடந்த ஜீன்27 இல் 5.3 மில்லியன் தூரத்தில் சூரியனை நெருங்கிச் சென்றதாக நாசா தெரிவித்துள்ளது.

இதுவரை சூரியனை நெருங்கிச் சென்றதிலேயே மிக நெருக்கமான தூரம் இது என தெிரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்த மாதம் 21 ஆம் திகதி வீனஸ் கிரகத்தின் ஈர்ப்பு சக்தியோடு ‘பார்க்கர்’ விண்கலம் 4.5 மில்லியன் மைல் தூரம் சூரியனை நெருங்கிச் செல்லவுள்ளது.

தற்போது சூரியனின் வெப்ப அலை பகுதியை நெருங்கிய போதும் பாதிப்பின்றி செயல்பட்டு வரும் இந்த விண்கலம், அடுத்த மாதம் 4.5 மில்லியன் மைல் அருகில் சென்றும் பிரச்சனையின்றி செயற்பட்டால் , சூரியனின் ஆற்றலுக்கான ஆதாரம் மற்றும் செயற்பாடுகளை அறிய முடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...