பணமோசடி செய்ததற்காக ஆஸ்திரேலியாவின் கிரவுன் குழுமத்திற்கு 450 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை 2 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும் என பெடரல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் முதலில் 125 மில்லியன் டாலர்களையும் அடுத்த ஆண்டு 125 மில்லியன் டாலர்களையும் செலுத்த வேண்டும்.
பெடரல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இறுதித் தொகையான 200 மில்லியன் டாலர்களை 2ம் ஆண்டு முடிவதற்குள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
2016-2022 காலகட்டத்தில் 546 வழக்குகளில் பணமோசடி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை மீறியதாக கிரவுன் குழு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை சூதாட அனுமதிப்பது அவர்கள் மீதான பெரும் குற்றச்சாட்டாகும்.