Newsஅரிய வகை நோயால் அவதிப்படும் அவுஸ்திரேலிய சிறுமி

அரிய வகை நோயால் அவதிப்படும் அவுஸ்திரேலிய சிறுமி

-

அவுஸ்திரேலியாவில் பெல்லா மேசி (Bella Macey) எனும் 10 வயது சிறுமிக்கு உலகிலேயே அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமியின் வலது காலை தாக்கியுள்ள இந்த நோயால், அவர் நகரும் போதும், அந்த காலை தொடும்போதும் அவரது கால் முழுவதிலும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

அவர் குடும்பம், பிஜி நாட்டிற்கு விடுமுறைக்கு சென்றிருந்த போது அந்த சிறுமியின் வலது காலில் ஒரு கொப்புளம் ஏற்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு நரம்பியல் தொடர்பான சிக்கலான பிராந்திய வலி நோய்க்குறி (CRPS) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவ உலகில் இது மனிதகுலம் அறிந்த மிகவும் வேதனையான நிலை என்றும் தீவிர வலியை ஏற்படுத்தும் அரிய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்லாவின் உடலில் இந்த வலி உணரப்படும் இடங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில்,

‘கால் பயங்கரமாக எரிகிறது. என்னால் குளிக்க முடியாது. என்னால் காலில் எந்த இடத்தையும் தொடக்கூட முடியாது’ என்கிறார்.

பாடசாலைக்கு செல்வது, விளையாடுவது போன்ற குழந்தைகளுக்கான செயல்கள் மட்டுமின்றி பேண்ட் அணிவது போன்ற அன்றாட நடவடிக்கைகள் கூட அவரால் செய்ய முடியாது.

அவுஸ்திரேலியாவில் உரிய மருத்துவ நிவாரணம் கிடைக்காததால், பெல்லாவும் அவரது தாயும் அரிசோனாவில் உள்ள ஸ்பெரோ கிளினிக்கில் மருத்துவ ஆலோசனை பெற்று, அதன்படி சிகிச்சை பெற தேவையான பணத்திற்காக கோஃபண்ட்மீ வலைத்தளம் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.

‘இந்த சிறுமி தனது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் ஒரு நோயினால், தனது குழந்தை பருவ மகிழ்ச்சியை இழந்து கொடூரமான வலியுடன் போராடி வருகிறார்.

அவரது வலது கால் மற்றும் இடுப்பு பகுதி வரை இயக்கம் நின்று விட்டது. அவள் இப்போது பெரும்பாலும் படுக்கையில்தான் இருக்கிறார்.

வீட்டிற்கு உள்ளே சுற்றி வர வேண்டும் என்றால்கூட சக்கர நாற்காலி தயவில்தான் செய்ய முடிகிறது,’ என GoFundMe சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Latest news

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...

ஆஸ்திரேலியா சுதந்திரமாக இருக்க வேண்டும் – அல்பானீஸ் வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியா அமெரிக்காவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற முயற்சிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது உரையில் தெளிவுபடுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்று சிட்னியில் ஒரு முக்கிய...