உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி வரும் நிலையில், சீனாவில் முதியோர்களை கவனித்துக்கொள்ள மனித உருவ ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காயை தலமாக கொண்ட ஃபோரியர் இன்டலிஜெண்ட்ஸ் நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது.
அதேவேளை சீனாவில் 2035ம் ஆண்டுக்குள் 60 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடி 80 லட்சத்தில் இருந்து 40 கோடியாக உயரும் என்று சமீபத்தில் வெளியான மக்கள் தொகைக்கான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் வயதானவர்களை கவனித்துக்கொள்ளும் வகையில் இந்த மனித உருவ ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சேவையை வழங்குவது, நோயாளிகளை படுக்கையில் இருந்து சக்கர நாற்காலிக்கு அழைத்துச் செல்வது, பொருட்களை எடுத்துக் கொடுப்பது போன்ற பணிகளை இந்த ரோபோ செய்து தரும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது ஆராய்ச்சி நிலையில் இருக்கும் இந்த ரோபோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.