Cinemaசெல்வராகவனை இயக்கும் தனுஷ் - வெளியான தகவல்

செல்வராகவனை இயக்கும் தனுஷ் – வெளியான தகவல்

-

இயக்குனர் செல்வராகவன் நடிகரான பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிகின்றன. ஏற்கனவே சாணிகாகிதம், பகாசுரன், பர்ஹானா ஆகிய படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

இந்த நிலையில் தனது தம்பி தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்கவும் செல்வராகவனிடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் படம்தான் தனுசுக்கு திருப்புமுனையாக அமைந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் ஆகிய படங்களிலும் தனுஷ் நடித்து இருந்தார்.

தற்போது மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் அடுத்து தனது 50-வது படத்தை இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில்தான் செல்வராகவனை நடிக்க வைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் செல்வராகவன் வில்லன் வேடத்தில் நடிக்கிறாரா? அல்லது குணசித்திர கதாபாத்திரத்தில் வருகிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

தை பொங்கல் வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்த தகவல் தொடர்பு துறை அமைச்சர் Hon Michelle Rowland MP

விக்டோரியா காவல்துறையினரிடம் சம்பளம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள்

விக்டோரியா மாநில போலீஸ் சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சினை இப்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. ஒரு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கவலையை விக்டோரியா காவல்துறை...

பாகிஸ்தான் சுரங்க விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தின் வாயுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா நகரின் சஞ்ஜிதி பகுதியருகே அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்தில்...

சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு வெளியான முக்கிய தகவல்

குழந்தைகளின் மன வலிமையை மேம்படுத்தும் வகையில், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பயிற்சிகள் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே அனைத்தையும் தாங்கும் குழந்தையாக வளர்ப்பதே இதன்...

சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு வெளியான முக்கிய தகவல்

குழந்தைகளின் மன வலிமையை மேம்படுத்தும் வகையில், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பயிற்சிகள் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே அனைத்தையும் தாங்கும் குழந்தையாக வளர்ப்பதே இதன்...

இணைய வசதிகளை இன்னும் வேகமாக்க ஆஸ்திரேலியா தயார்

மக்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான மற்றும் மலிவு விலையில் இணைய வசதிகளை வழங்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய...