Newsநாசா வெளியிட்ட நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படம்

நாசா வெளியிட்ட நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படம்

-

அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

2022 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளது.ரூ.75 ஆயிரம் கோடி செலவில் செலுத்தப்பட்ட இந்த தொலைநோக்கியானது பிரபஞ்சத்தின் பிறப்பிடம் குறித்த 4 புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இந்த புகைப்படங்களே பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சியாக உள்ளன.

அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை நாசா தற்போது கொண்டாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக மேலும் ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படம் ரோ ஒபியுச்சி மேகக்கூட்டத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியை காட்டுகிறது. இதில் சுமார் 50 இளம் நட்சத்திரங்கள் உள்ளன.

அவை அனைத்தும் சூரியனை போன்ற நிறை உடையவை என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமர் பற்றி வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அடுத்த கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் கூட்டாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால், அவர்...

வார இறுதிக்கு தயாராகும் ஆஸ்திரேலியர்களுக்கான வானிலை அறிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குயின்ஸ்லாந்து மற்றும்...

வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய விக்டோரியா பூங்காக்கள்

விக்டோரியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சில தேசிய பூங்காக்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் விக்டோரியாவில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த பூங்கா உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது...

பயணியின் பொதியில் இருந்த முதலை தலை!

கனடா பிரஜை ஒருவரின் பயணப் பொதியில் 'முதலை மண்டை ஓடு' ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. குறித்த 32 வயதான கனேடியர் புதுடெல்லி விமான நிலையத்தில்...

ஓட்டுநர் சட்டங்களை கடுமையாக்கும் மத்திய அரசு

வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துபவர்கள் மற்றும் சீட் பெல்ட்களை சரியாக அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவோம் என மத்திய அரசு...

காதல் ஆலோசனைக்காக இணையத்தை நாடும் ஆஸ்திரேலியர்கள்

இளம் ஆஸ்திரேலியர்கள் தங்கள் காதல் உறவுகள் தொடர்பான ஆலோசனைகளுக்கு இணைய ஆதாரங்களை நாடுவதற்கான போக்கு இருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. 18-34 வயதுடைய 500 க்கும் மேற்பட்ட...