பிரபல பொருளாதார நிபுணரான மிச்செல் புல்லக், ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1959ல் ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட பிறகு இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பதும் சிறப்பு.
தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் டாக்டர் பிலிப் லா, 07 வருட சேவையை முடித்து செப்டம்பர் 17 அன்று ஓய்வு பெற உள்ளார்.
அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என பல மாதங்களாக நிலவி வந்த கருத்துக்கள் இதன்மூலம் உண்மையாகியுள்ளது.
கடந்த 14 மாதங்களில், 11 முறை வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதால் பல தரப்பினரால் விமர்சிக்கப்பட்டார்.
பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் ஆகியோர் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்குப் பிறகு புதிய பதவிக்கு பெயரிடப்பட்டதாக தெரிவித்தனர்.