ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் ஒன்றான வெஸ்ட்பேக் வங்கி, அதிக லாபம் ஈட்டும்போதும் ஊழியர்களைக் குறைப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
கடந்த 6 வாரங்களில் 650 வேலைகளை அவர்கள் குறைத்துள்ளனர் மேலும் எதிர்காலத்தில் மேலும் வெட்டுக்கள் செய்யப்படும் என்று கணித்துள்ளனர்.
இந்த ஆண்டு மொத்தம் 751 வெஸ்ட்பேக் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 06 மாத காலப்பகுதியில் 22 வீதம் அல்லது 04 பில்லியன் டொலர் இலாபம் கிடைத்துள்ள சூழலில் மேற்கொள்ளப்படும் இந்த வேலை வெட்டு முற்றிலும் நியாயமற்றது என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
எவ்வாறாயினும், செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த ஊழியர் குறைப்பு ஒரு வருடத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டதாக வெஸ்ட்பேக் வங்கி தெரிவித்துள்ளது.