மெல்பேர்னில் 2 துரித உணவு விடுதிகளில் கொள்ளையடித்த 4 சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களில் 13 வயதுடைய ஒருவரும் 03 15 வயதுடையவர்களும் அடங்குவதாக விக்டோரியா மாநில பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 2.25 மணியளவில் உணவகம் ஒன்றின் மீது முதலில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, இந்தக் குழு க்ளைட் நார்த் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தையும் தாக்கியது.
இரண்டு சந்தர்ப்பங்களிலும் சந்தேகத்திற்கிடமான சிறுவர்கள் உணவக ஊழியர்களை கூரிய ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் திருடப்பட்ட காரை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அவர்களின் தாக்குதலால் முதல் உணவகத்தின் ஊழியர் ஒருவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டது.
சந்தேகத்திற்குரிய குழந்தைகள் பின்னர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.