இந்தோனேசியாவில் உள்ள பிரபல ரிசார்ட் தலமான பாலிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் $15 என்ற இந்த புதிய வரியானது ஆஸ்திரேலியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும்.
இந்த பணத்தை பாலி தீவை மேம்படுத்தவும், அதன் வசதிகளை மேம்படுத்தவும் பயன்படுத்த உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவிக்கின்றனர்.
பாலி தீவு ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக கருதப்படுகிறது.
கடந்த மே மாதம், 400,000க்கும் அதிகமான மக்கள் அங்கு சென்றிருந்தனர், அவர்களில் 25 சதவீதம் பேர் ஆஸ்திரேலியர்கள்.