சிட்னியில் ஆஸ்திரேலியர்களிடையே பிரபலமாக இருக்கும் லிட்ச்ஃபீல்ட் தேசிய பூங்காவில் உள்ள வாங்கி நீர்வீழ்ச்சியில் முதியவர் ஒருவரை கடந்த திங்கட்கிழமையன்று முதலை தாக்கியது.
பொதுவாக நீந்துவதற்காக அவ்விடத்துக்கு ஆஸ்திரேலியர்கள் அங்கு செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலையால் தாக்கப்பட்ட அந்த 67 வயது முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் முதலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் மீண்டும் அவற்றைக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் வடக்கு மாநிலத்தின் முதலமைச்சர் நட்டாஷா ஃபைல்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முதலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க அவற்றைக் கொல்லும் நடவடிக்கை 1970களில் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 100,000 முதலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.