Sportsதனது ஓய்வு காலத்தை அறிவித்த மெஸ்சி

தனது ஓய்வு காலத்தை அறிவித்த மெஸ்சி

-

கட்டாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கி கிண்ணத்தை வென்று கொடுத்த லயோனல் மெஸ்சி கடந்த ஜூன் மாதம் பிரான்சின் பி.எஸ்.ஜி. கிளப்பில் இருந்து விலகி அமெரிக்காவை சேர்ந்த இண்டர் மியாமி கிளப்பில் இணைந்தார்.

மேஜர் லீக் போட்டியில் வருகிற 21 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இண்டர் மியாமி அணிக்காக களம் இறங்க அமெரிக்கா சென்றுள்ள 36 வயது மெஸ்சி அர்ஜென்டினா டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில்,

எனது வயதை கணக்கில் கொண்டால் இன்னும் எத்தனை நாட்கள் அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட முடியும் என்பது தெரியவில்லை. எனது ஓய்வுக்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்று கருதுகிறேன்.

எனது ஓய்வுக்கான தருணம் எப்போது வரும் என்பது துல்லியமாக தெரியவில்லை. எல்லாவற்றையும் சாதித்து விட்ட நான் தற்போது ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

மெல்பேர்ண் மைதானத்தை புதுப்பித்தல் பணிகள் குறித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு சந்தேகம்

மெல்பேர்ணின் Heidelberg பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் திடீரென ஏற்பட்ட பாரிய நிலச்சரிவின் இடத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த இடத்தைப் புதுப்பிக்கப் பயன்படுத்தப்பட்ட அசாதாரண...

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...