Cinemaஜெயிலர் படத்தின் Second Single PROMO வெளியானது - இணையத்தில் வைரல்

ஜெயிலர் படத்தின் Second Single PROMO வெளியானது – இணையத்தில் வைரல்

-

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார்.

அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ பாடல் வருகின்ற 17 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

‘ஜெயிலர்’ திரைப்படம் வருகன்pற ஒகஸ்ட் 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலைக் கழுகு தேர்வு

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்தாா். வெண்தலைக் கழுகுகள் அறிவியல் ரீதியாக “ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்”...

முதல் முறையாக வெளிநாடு செல்லும் காதலர்களுக்கான அறிவுரை

மனைவியுடன் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் வழிகாட்டிகளை 'சிஎன் டிராவலர்' வெளியிட்டுள்ளது என்பதும் சிறப்பு. அதன்படி, அவர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப்...

விக்டோரியாவில் உள்ள நீரில் கண்டறியப்பட்டுள்ள ஒரு அசாதாரண வைரஸ்

விக்டோரியாவில், எங்கள் நீரில் ஒரு அசாதாரண வைரஸ் போக்கு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் நடத்தப்பட்ட வழக்கமான கழிவுநீர் மாதிரி சோதனையின் போது இது...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

சாதனை படைத்தது MCG-யின் முதல் நாள் வசூல்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) 26ம் திகதி தொடங்கிய Boxing Day டெஸ்ட் போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். அதன்படி, முதல் நாளில் Boxing Day...