Cinemaகதாநாயகனாக களமிறங்கும் விஜயின் மகன் 

கதாநாயகனாக களமிறங்கும் விஜயின் மகன் 

-

தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரை ஹீரோவாக நடிக்க வைக்க இப்போதே சில இயக்குநர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.

22 வயதாகும் சஞ்சய், அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் திரைப்பட கலையை பயின்று வருகிறார்.

விஜய் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான ‘போக்கிரி படத்தில் இடம் பெற்றுள்ள ‘வசந்த முல்லை’ பாடல் பலருக்கும் பிடிக்கும். இந்த பாடலில் சிறு பிள்ளையாக அறிமுகமாகியிருந்தார் விஜய்யின் மகன் சஞ்சய். 7 வயது குழந்தையாக இந்த பாடலில் தோன்றிய இவரை பலருக்கும் பிடித்து போனது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டைக்காரன்’ படத்திலும் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் அப்பாவுடன் நடனமாடி கலக்கினார் சஞ்சய். இதையடுத்து அவரை எந்த படத்திலும் காணவில்லை.

திரைப்பட கலை பயின்று வரும் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் எண்ட்ரி கொடுப்பார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஆயத்த பணிகளில்தான் சஞ்சய் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் சஞ்சய் அவ்வப்போது குறும்படங்களை எடுத்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளாராம். பிற வாரிசு நடிகர்களை போலவே விஜய்யின் மகனும் சினிமாவிற்கு வந்தால் ஹீரோவாகத்தான் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரை தன் படம் ஒன்றில் நாயகனாக நடிக்க வைக்க திட்டம் தீட்டியுள்ளதாக பிரபல இயக்குநர் ஒருவர் கூறியிருக்கிறார்.

1999ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்த படம், ‘நீ வருவாய் என’. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ராஜகுமாரன். நடிகை தேவயானியும் இவரும் காதலித்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராஜகுமாரான் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வெற்றி இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். இவர், நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்து விட்டதாகவும் அதில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சயை ஹீரோவாக நடிக்க வைக்க விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜகுமாரன்-தேவயானி தம்பதியருக்கு பிரியங்கா ராஜகுமாரன் மற்றும் இனியா குமாரான் என்ற இரண்டு மகள்கள் உள்ளார். விஜய் மகன் ஹீரோவாக நடித்தால் தன் மகளை அதில் கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என ராஜகுமாரன் ஒரு நேர்காணலில் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார். மகள்களுக்கும் சினிமா மீது ஆசை உள்ளதாகவும் விஜய்யின் மகனை வைத்து படம் இயக்கினால் அதில் தன் மகள்களை நடிக்க வைக்கலாமா என ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...