Newsபாகிஸ்தான் இடிக்கப்பட்ட 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில்

பாகிஸ்தான் இடிக்கப்பட்ட 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில்

-

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் இராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்து இருந்தது.

இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர். மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளி கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாள் காலையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இரவில் மின்சாரம் இல்லாத நிலையில், புல்டோசர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கோவிலை இடித்து தள்ளி விட்டு சென்றனர்.

கோவிலின் உட்புற பகுதி முழுவதும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது. எனினும், வெளிப்புற சுவர்கள் மற்றும் முக்கிய நுழைவு வாயிலை அவர்கள் விட்டு சென்று உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பாக பொலிஸார் வாகனம் ஒன்றும் காணப்பட்டது என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள பழமையான மற்றொரு கோவிலான ஸ்ரீபஞ்சமுக அனுமன் கோவிலை சேர்ந்த ஸ்ரீராம் நாத் மிஷ்ரா மகராஜ் இதுபற்றி கூறும்போது, இது மிக பழமையான கோவில். 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில். இந்த பகுதியில், மிக பழமையான பொக்கிஷங்கள் புதைக்கப்பட்டு உள்ளன என்றும் நாங்கள் கேள்விப்பட்டு உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி இந்து சமூக உறுப்பினர் ஒருவர் கூறும்போது, எங்களை கட்டாயப்படுத்தி இரண்டு பேர் வெளியேற்றினர். இந்த கோவிலை மற்றொரு நபருக்கு பாகிஸ்தான் கரன்சி மதிப்பின்படி ரூ.23 கோடிக்கு விற்க 2 பேர் ஆலோசித்து வந்தனர். அதனை வாங்க விரும்புபவர்கள் அந்த இடத்தில் வர்த்தக கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்து உள்ளனர் என கூறியுள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...