Newsஅதிக கடன் சுமையில் சிக்கியுள்ள எலன் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம்

அதிக கடன் சுமையில் சிக்கியுள்ள எலன் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம்

-

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க் பல்வேறு விதமான மாற்றங்களை அந்நிறுவனத்தில் கொண்டு வந்துள்ளார்.

முதலில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் நீக்கப்பட்ட சிலர் மீண்டும் ட்விட்டரில் சேர்க்கப்பட்டனர்.

இதில் பதிவிடும் கருத்துகள் தொடர்பாக மாற்றங்களும் கொண்டு வரப்பட்டன. இதனால் விளம்பரதாரர்கள் வழங்கும் விளம்பரங்கள் படிபடியாக குறைந்தது.

முன்னதாக மஸ்க் , ட்விட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறிய விளம்பரதாரர்கள் மீண்டும் வருவார்கள். நிறுவனம் லாபப் பாதையில் பயணிக்கும் என கடந்த ஏப்ரலில் தெரிவித்து இருந்தார்.

அதன் பின், விளம்பரத் துறையில் அனுபவமுள்ள லிண்டா யாக்காரினோவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார்.

இருப்பினும், ஒரு நாளில் இத்தனை ட்விட்களை மட்டும் தான் பயனாளர்கள் பார்க்க முடியும் என ட்விட்டரில் சில கட்டுப்பாடுகளை விதித்தது பயனாளர்களை கவலையடைய செய்தது.

தற்போது ட்விட்டரில் விளம்பரங்கள் பாதியாக குறைந்ததால் நிறுவனம் இன்னும் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

வணிக ஆலோசனையை வழங்கும் ட்விட்டுக்கான பதிலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ட்விட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல ட்விட்டருக்கு அதிக அளவிலான கடன்சுமை இருக்கிறது.

வியாபாரம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக ட்விட்டரை லாபப்பாதைக்கு கொண்டு வரவேண்டும் எனக்கூறியுள்ளார்.

இந்த நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் தள்ளுபடி விலையில் உணவு வழங்க புதிய செயலி

குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Too Good to Go", வணிகங்கள் நாளின்...

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...

கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு விதிக்கப்பட்ட $40,000 அபராதம்

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏழு மாதங்களாக உணவு உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஒரு பிரபலமான...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...