விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.
கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 19 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் இரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
நன்றி தமிழன்
