Newsஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்!

ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்!

-

ஆஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது.

பெரிய அளவிலான உலோக பாகம் போன்று இருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.

மேலும் அந்த அபாயகரமான பொருளில் இருந்து விலகி இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறும்போது, மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது.

அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம்.

மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அந்த பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது, விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

இந்த மர்ம பொருள் 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. ராக்கெட் பாகம் போன்று உள்ளது.

Latest news

இளவரசி கேட்டின் புற்றுநோய் நிலை குறித்து வெளியான சிறப்பு அறிக்கை

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயில் இருந்து குணமடைந்து வருவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பதாக அவர் அறிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில்...

Australia Day-யில் முக்கிய நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அவுஸ்திரேலியர்கள் மத்தியில் விசேட கவனத்தை ஈர்த்துள்ள அவுஸ்திரேலியா தினத்தன்று (ஜனவரி 26) அந்நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் வானிலை தொடர்பான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம்...

எலோன் மஸ்கை எச்சரித்துள்ள பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்

உலகின் நம்பர் ஒன் பணக்காரராகக் கருதப்படும் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், எதிர்வரும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தலில் தலையிட வேண்டாம் என பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்...

தரத்தில் சிறந்து விளங்கும் விக்டோரியா கல்வித்துறை!

சர்வதேச மாணவர் சமூகம் விக்டோரியாவில் உள்ள பள்ளி அமைப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநில பள்ளிக்கல்வித்துறையில் இருக்கும் தரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம்...