Newsஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்த அதிரடி தடை விதித்த நாடு!

ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்த அதிரடி தடை விதித்த நாடு!

-

அரசத்துறை பணிகளுக்கு வெளிநாட்டு சாதனங்களை சார்ந்து இருப்பதை தடுக்கும் வகையில், அரசாங்க அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த ரஷ்யா அதிரடி தடை விதித்துள்ளது.

இன்று முதல் அரசாங்க அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன ஐபோன் மற்றும் இதர சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என ரஷ்ய வர்த்தக துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் தொலை தொடர்பு, அரசாங்க ஊடகத்துறை என அரசாங்க துறையை சேர்ந்த அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என தெரிவிக்ப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்ட சில நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இந்த பட்டியலில் அனைத்து அரச அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரச பணிகளை மேற்கொள்வதற்காக ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்து இருக்கிறது.

இதன் காரணமாக அரசு அதிகாரிகள் அலுவல் பூர்வ தகவல் பரிமாற்றத்தை தவிர்த்து, தங்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவன சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் தள்ளுபடி விலையில் உணவு வழங்க புதிய செயலி

குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Too Good to Go", வணிகங்கள் நாளின்...

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...

கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு விதிக்கப்பட்ட $40,000 அபராதம்

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏழு மாதங்களாக உணவு உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஒரு பிரபலமான...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...