Newsஅவுஸ்திரேலிய இராணுவ வீரரின் வழக்கு தோல்வி

அவுஸ்திரேலிய இராணுவ வீரரின் வழக்கு தோல்வி

-

ஆப்கானிஸ்தானில் 4 பேரை சட்டவிரோதமாக கொன்றதாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவுஸ்திரேலியாவின் முன்னாள் போர் வீரர் மேல்முறையீடு செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் உயரடுக்கு சிறப்பு விமான சேவை பிரிவின் முன்னாள் ஓய்வு பெற்ற வீரரான Ben Roberts-Smith, ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் சேவையாற்றிய போது சட்டவிரோதமாக 6 பேரை கொன்றதாக அவுஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று 2018 கட்டுரை வெளியிட்டு இருந்தது.

இதையடுத்து தன் மீது அவதூறு பரப்பும் விதமாக குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவித்து பத்திரிக்கைக்கு எதிராக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

அதனடிப்படையில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் முடிவில், ஜூன் 1 திகதி பத்திரிக்கையின் குற்றச்சாட்டுகள் போலியானது இல்லை என்று தெரிவித்ததுடன், பென் ராபர்ட்ஸ்- ஸ்மித்தின் அவதூறு வழக்கு தோல்வியடைந்ததாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் கூறப்பட்ட 6 சட்டவிரோதமான கொலைகளில் 4க்கு பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் தான் காரணம் என்றும் நீதிபதிகள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் தற்போது போர் குற்றங்கள் தொடர்பான குற்றவியல் வழக்கின் கீழ் அவுஸ்திரேலிய பொலிஸாரின் விசாரணையில் உள்ளார்.

Latest news

Augathellaவின் நீர் விநியோக இடமான Charleville-ல் மூளையை உண்ணும் ஆபத்தான அமீபா கண்டுபிடிப்பு

தென்மேற்கு குயின்ஸ்லாந்து ஷையரின் குடிநீர் விநியோக நிலையத்தில் மூளையை உண்ணும் ஒரு அரிய மற்றும் ஆபத்தான அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Charleville மற்றும் Augathella-இற்கான குடிநீரில் Naegleria fowleri என்ற...

உணவுப் பொட்டலத்தில் எடையுடன் கூடிய e எழுத்து என்ன?

உணவுப் பொட்டலத்தில் உள்ள "e" சின்னம் (250 கிராம் e) அதன் எடையுடன் சேர்த்து, கேள்விக்குரிய பொருள் சரியான எடையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...