நியூசிலாந்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ஆக்லாந்தில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டுமான தளத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் இது ஒரு நபரின் தாக்குதல் மட்டுமே என்றும், தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் வலியுறுத்தினார்.
ஆக்லாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைப் போட்டியின் தொடக்கப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
போட்டிகள் தடையின்றி நடத்தப்படும் என்றும் நியூசிலாந்து பிரதமர் உறுதியளிக்கிறார்.