ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் மதுவிலக்கு மேலும் 12 முதல் 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் குற்றச் செயல்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளதால், நிலைமையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இவ்வாறான வன்முறைச் செயல்கள் சுமார் 63 வீதத்தால் குறைந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் கடந்த ஆண்டு மே மாதம் மதுபானச் சட்டங்கள் தளர்த்தப்பட்டதிலிருந்து வன்முறைகள் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் கட்டுப்பாடுகள் புதுப்பிக்கப்பட்டன.