Cinemaதுருவ நட்சத்திரம் படத்தில் இருந்து வெளியாகியுள்ள பாடல்

துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து வெளியாகியுள்ள பாடல்

-

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் பிற்போடப்பட்டது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ பாடல் இன்று (ஜூலை 19) காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் இரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றது.

Latest news

விக்டோரியர்களுக்கு வசதியான சுகாதார சேவைகளுக்கான திட்டங்கள்

விக்டோரியா மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, Community Health First  அரசாங்கத்திற்கு $75 மில்லியன் முதலீட்டை முன்மொழிந்துள்ளது . பொதுமக்களுக்கு மலிவு விலையில் அதிக மதிப்பு...

Work From Home-ஐ சட்டப்பூர்வமாக்க விக்டோரியன் அரசு தயார்

விக்டோரியா மாநில அரசு புதிய சட்டத்தின் மூலம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை சட்டப்பூர்வமாக்க தயாராகி வருவதாக பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார் . அதன்படி, விக்டோரியாவில்...

லொஸ் ஏஞ்சல்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து

அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான கலிபோர்னியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள செவ்ரான் எல் செகுண்டோ சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா ஆளுநரின்...

மெல்பேர்ணில் நீரில் மூழ்கக்கூடிய பகுதிகளைக் காட்டும் புதிய வரைபடம்

மெல்பேர்ணின் உள் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள், வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மெல்பேர்ண் வாட்டர் இன்று வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட வெள்ள வரைபடம், நூறு...

வெளிநாட்டு தலையீடு இல்லாமல் நாட்டைப் பாதுகாப்போம் – அரசாங்கம்

ஆஸ்திரேலியாவை பாதுகாப்பான நாடாக மாற்றுவதற்கு உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறது. நமது நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் தேசிய நலன்களுக்கு வெளிநாட்டு தலையீட்டால் ஏற்படும் அச்சுறுத்தல்கள்...

ஆஸ்திரேலியாவைத் தாக்க இருக்கும் புயல்களுக்கான கவர்ச்சிகரமான பெயர் பட்டியல்

ஆஸ்திரேலியாவின் அடுத்த வெப்பமண்டல புயல்களுக்கான புதிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நவம்பர் முதல் ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் புயல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக...