Newsகணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை - துயர சம்பவம்

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை – துயர சம்பவம்

-

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரமக்குடி நேரு நகரை சேர்ந்தவர் சுதாகரன் 36. இவரது மனைவி – தாரணி காமாட்சி 25. இவர்களுக்கு 3 வயதில் ஹர்சித் என்ற ஆண் குழந்தை உள்ளது. தச்சு வேலை செய்த சுதாகரன், நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாடியிலிருந்து நிலை தடுமாறி விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்தவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மாலை இறந்தார்.

கணவர் இறந்த செய்தி அறிந்த மனைவி தாரணி காமாட்சி வேதனை அடைந்தார். மனமுடைந்தவர் இரவு வீட்டில் மின் விசிறியில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரமக்குடி போலீசார் விசாரித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

தென்கிழக்கு மெல்பேர்ணில் நடந்த பயங்கர விபத்து – இருவர் பலி

மெல்பேர்ணின் தென்கிழக்கில் இன்று அதிகாலை இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மெல்பேர்ணின் மத்திய வணிக மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மீ...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...