Newsநகருக்குள் உலாவரும் பெண் சிங்கம் - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நகருக்குள் உலாவரும் பெண் சிங்கம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

-

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பெண் சிங்கம் ஒன்று நடமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெர்லினில், மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில், பெண் சிங்கம் ஒன்று காட்டுப்பன்றி ஒன்றை உண்ணும் காட்சிகள் வெளியாகி திகிலை ஏற்படுத்தியுள்ளன.

நூற்றுக்கும் அதிகமான பொலிசார் அந்த சிங்கத்தைப் பிடிப்பதற்காக களமிறங்கியுள்ளார்கள். பொலிசாரும் வேட்டைக்காரர்களும் சிங்கத்தின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக சம்பந்தப்பட்ட பகுதியில் கூடியுள்ளார்கள்.

இந்நிலையில், மக்கள் வீடுகளுக்குள் பத்திரமாக இருக்குமாறும், பெர்லினின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதிகளைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இன்னொரு பக்கம், சர்க்கஸ் நிறுவனங்கள், வன விலங்கு காப்பகங்களிலிருந்து சிங்கம் எதுவும் தப்பிக்கவில்லை என்பதையும் உறுதி செய்யபட்டுள்ளதால் இந்த சிங்கம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து குழப்பமும் உருவாகியுள்ளது.

Latest news

3,800 ஆண்டுகள் பழமையான தொலைந்து போன நகரம் கண்டுபிடிப்பு

பெருவின் வடக்கு பாரன்கா பகுதியில், கிமு 1800 முதல் 1500 வரையிலான காலத்தைச் சேர்ந்த ஒரு பழங்கால, தொலைந்து போன நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெனிகோ...

விக்டோரியாவில் 14 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகரித்துள்ள சாலை விபத்து இறப்புகள்

கடந்த 72 மணி நேரத்தில் விக்டோரியாவில் நடந்த பத்து விபத்துகளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ணின் வடகிழக்கில் நேற்று காலை இரண்டு வாகனங்கள் மோதியதில்...

மூன்றாம் உலகப் போர் குறித்து நேட்டோ எச்சரிக்கை

சீன ஜனாதிபதியும் ரஷ்ய பிரதமரும் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பதன் மூலம் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று நேட்டோ தலைவர் மார்க் ருட்டே கூறுகிறார். சீன மற்றும்...

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karijini தேசிய பூங்கா நீச்சல் தளத்தில் விழுந்த குழந்தை

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karijini தேசிய பூங்காவில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்த ஒரு சிறு குழந்தையை அவசர சேவைகள் மீட்டுள்ளன. பிரபலமான Dales Gorge நீச்சல் தளத்தில் சிறுவன்...

45 வயது நபரை மணந்த 6 வயது சிறுமி

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆறு வயது சிறுமியை 45 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பெண்ணை அவளது தந்தை...

ஒலிம்பிக் மைதானங்களை கட்ட தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலம் கட்டுமானத் துறையில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2032 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் குயின்ஸ்லாந்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரங்கங்களின் கட்டுமானப் பணிகள்...