விக்டோரியாவில் புதிய கழிவு மறுசுழற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் படி பலவிதமான கேன்-பாட்டில்கள் மற்றும் பலவிதமான பொதிகளை ஒப்படைத்து தலா 10 சென்ட்டுக்கு பணம் பெறலாம்.
நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று விக்டோரியா மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற பொருட்களுக்கான 600 சேகரிப்பு நிலையங்களும் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட உள்ளன.
இருப்பினும், வழங்கப்படும் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மக்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.