அமெரிக்க கடற்படையின் தளபதியாக பெண் ஒருவரை நியமிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.
அட்மிரல் லிசா ஃபிரான்செட்டி அமெரிக்க கடற்படையில் 38 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் மற்றும் தற்போதைய துணைத் தலைவராக உள்ளார். அவரையே கடற்படைத்தளபதியாக நியமிக்க அதிபர் பைடன் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த நியமனம் அந்நாட்டு செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. செனட் இந்த நியமனத்திற்கு அனுமதி அளித்தால், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைவராக இருந்த அட்மிரல் லிசா ஃபன்செட்டி அமெரிக்க கடற்படையின் முதல் பெண் தளபதியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
“தனது வாழ்க்கை முழுவதும், அட்மிரல் ஃபிரான்செட்டி செயல்பாட்டு மற்றும் கொள்கை ஆகிய இரண்டிலும் விரிவான நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என்று பைடன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதேவேளை அமெரிக்க கடற்படையின் பசுபிக் கடற்படையின் தற்போதைய தளபதியான அட்மிரல் சாமுவேல் பாப்பரோவை கடற்படை தளபதியாக தேர்ந்தெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் அதிபர் பைடனுக்கு பரிந்துரைத்திருந்தார்.