வட்ஸ்அப்பில் ஏதாவது ஒரு புதிய எண்ணுக்கு மெசேஜ் செய்வதற்காக, இனி அந்த எண்ணை அழைப்பு விபர பட்டியலில் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை.
அண்ட்ரோய்டோ, அப்பிள் போனோ தெரியாத நபர்களின் எண்களை இனி அழைப்பு விபர பட்டியலில் சேமித்து வைக்காமலே நேரடியாக வட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ய முடியும்.
முன்பு, யாருக்காவது வட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், அவரது மொபைல் எண்ணை அழைப்பு விபர பட்டியலில் சேமிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. தற்போது ஒருவரின் எண்ணை சேமிக்காமலே வட்ஸ் அப் செயலியில் மெசேஜ் செய்யலாம்.
எண்ணை சேமிக்காமல் நேரடியாக மெசேஜ் செய்வது எப்படி?:
- வட்ஸ்அப் மெசஞ்சரை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- வலது புறம் கீழே இருக்கும் நியூ சாட் பட்டனை ஓபன் செய்யுங்கள்.
- மேலே லென்ஸ் வடிவில் உள்ள பட்டனை க்ளிக் செய்து தாங்கள் மெசேஜ் செய்ய விரும்பும் எண்ணை அழுத்த வேண்டும்.
- அந்த எண்ணுக்கு அருகில் சாட் என ஆப்ஷன் வரும்.
- அதை கிளிக் செய்தால் போதும், அந்த எண்ணுக்கு நேரடியாக மெசேஜ் செய்யலாம்.