Newsகொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

-

கோவை வட வள்ளி வேம்பு அவென்யூயில் குடும்பமொன்று கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34) பொறியியலாளர். இவரது மனைவி லக்ஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்றுள்ளார். இவர்களுக்கு யக்சிதா (10) என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பாடசாலையில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுடன் இராஜேஷின் தாய் பிரேமா (74) என்ப வரும் வசித்து வந்தார்.

6 மாதங்களுக்கு முன்பு தான் இவர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறினார். கடந்த 3 நாட்களுக்கும் மேலாக இராஜேசின் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், லக்ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்த நிலையிலும் இறந்து கிடந்தனர்.

பொலிஸார் இராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அறையில் பொறியியலாளர் இராஜேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை பொலிஸார் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

பொறியியலாளர் இராஜேஷின் மனைவி லக்ஷயாவுக்கு, சின்மயா நகரை சேர்ந்த ஆசிரியரின் நட்பு கிடைத்தது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் அந்த ஆசிரியரிடம் தனது தேவைக்காக லக்ஷயா பணம் கேட்டுள்ளார். அவர் அடிக்கடி அவருக்கு பணம் கொடுத்துள்ளார்.

மேலும் தன்னிடம் இருந்த பணம் மட்டுமின்றி தனது நண்பர் ஒருவரிடம் இருந்தும் பணத்தை வாங்கி லக்ஷயாவுக்கு கொடுத்தார். இதுவரை ரூ.31 இலட்சம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே ஆசிரியருக்கு பணம் கொடுத்த அவரது நண்பர் பணம் கேட்கவே, 2 பேரும் லக்ஷயாவிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அவர் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் லக்ஷயாவின் கணவர் இராஜேசை சந்தித்து, உனது மனைவிக்கு நாங்கள் பணம் கொடுத்துள்ளோம்.

அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த் தணையை காண்பித்தனர். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் பணம் கொடுத்தவர்கள், அதனை கேட்டு தொந்தரவு கொடுக்கவே, இராஜேஷ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, பொலிஸார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...