குவாண்டாஸ் ஏர்லைன்ஸ், பயணிகள் ஏறுவதை விரைவுபடுத்த புதிய பைலட் திட்டத்தை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது.
அதன்படி, பெரும்பான்மையான விமானங்களின் முன் நுழைவாயிலுடன் கூடுதலாகப் பின்பக்க நுழைவாயில் வழியாகவும் பயணிகள் விமானத்திற்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கும்.
விமானத்தின் பின் இருக்கைகளில் இருக்கும் பயணிகளை முதலில் விமானத்தில் ஏற அனுமதிப்பது வழக்கமான நடைமுறை.
ஆனால், குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், முதலில் நடுப் பகுதியில் பயணிகளை அமர வைத்து, பின் முன் கதவு வழியாகவும், பின் இருக்கையில் உள்ள பயணிகளை பின் கதவு வழியாகவும் விமானத்திற்குள் நுழைய முடிவு செய்துள்ளது.
கிட்டத்தட்ட 02 வாரங்களுக்கு பிரிஸ்பேன் விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டு, அடுத்த ஒக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன் மூலம் விமான தாமதம் குறைவதோடு, பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு காத்திருக்கும் நேரமும் குறையும் என குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.