Cinemaஹிஜாப் அணியாத நடிகைக்கு சிறைத் தண்டனை விதித்த ஈரான்

ஹிஜாப் அணியாத நடிகைக்கு சிறைத் தண்டனை விதித்த ஈரான்

-

திரைப்பட விழாவில் நடிகை ஹிஜாப் அணியாமல் இருப்பது போன்ற விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டமையின் காரணமாக, திரைப்பட விழாவை தடை செய்வதற்கு ஈரான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

“சட்டத்தை மீறிய ஒரு சுவரொட்டியில் ஹஜாப் இல்லாத பெண்ணின் படம் பயன்படுத்தப்பட்டதை அடுத்து, கலாசார அமைச்சர் தனிப்பட்ட முறையில் ISFA திரைப்பட விழாவின் 13 ஆவது பதிப்பைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தார்” என்று அந்நாட்டு செய்தி நிறுவனமான IRNA செய்தி பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்த திரைப்பட விழாவுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிய குறும்பட சங்கம் (ISFA) அதன் வரவிருக்கும் குறும்பட விழாவிற்காக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த போஸ்டரில் 1982 ஆம் ஆண்டு வெளியான தி டெத் ஆஃப் யாஸ்ட்கர்ட் திரைப்படத்தில் நடிகை சூசன் தஸ்லிமி காணப்படுகிறார். இந்த விழா செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது.

1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்து ஈரானியப் பெண்களுக்கும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், 22 வயதான மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு தொடங்கிய ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து பெண்கள் ஆடை தொடர்பான விதிகளை மீறியுள்ளனர்.

மெஹ்சா அமினி ஆடை விதிமுறைகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த அவர், பின் கொல்லப்பட்டதை அடுத்து போராட்டம் வெடித்தது. முன்னதாக ஜூலை மாதம், அதிகரித்து வரும் பெண்களின் சட்டத்தை மீறுவதைப் பிடிக்க ரோந்துப்பணி மீண்டும் தொடங்கப்பட்டதாக காவல்துறை கூறியது.

பிரபல ஈரானிய நடிகை அப்சனே பயேகனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “அஃப்சானே பெய்கனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஐந்தாண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார், ஹிஜாப் அணியத் தவறியதற்காகவும், ஹிஜாப் சட்டத்தைப் பின்பற்றாததற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...