தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வரும் நிலையில்க கடந்தஇரண்டு நாட்களுக்கு முன்பு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. மண்சரிவில் இருந்து 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தகவலறிந்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ராய்காட் மாவட்டம் சென்று மண்சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டு மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தேசிய பேரிடர் மீட்புக்குழு படைகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மண்சரிவில் சிக்கி நேற்று மேலும் 5 உடல்களை மீட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இதனால், பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது. இந்நிலையில், இன்று மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இன்னும், 86 கிராமவாசிகள் கண்டுபிடிக்கப்படாததால் அவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் ஒன்பது ஆண்கள், பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி தமிழன்