சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையாகிறார்.
மேலும் பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே ரூ. 500 கோடி வரை பிசினஸ் செய்துவிட்டது என கூறப்படுகிறது.
ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. நேற்று வெளிவந்த இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ தற்போது youtubeல் பல மில்லியன் பார்வையாளர்களை குவித்து பட்டையை கிளப்பி வருகிறது.
