ஆஸ்திரேலியாவில் வாடகைக்கு குடியிருப்பவர்களில் 4/5 பேர் தங்கள் வருமானத்தில் 30 சதவீதத்தை வாடகைக்கு செலவிடுவதாக தெரியவந்துள்ளது.
மேலும், வீட்டு வாடகை செலுத்துவோர் மற்றும் அடமானக் கடன் செலுத்துபவர்களில் 75 சதவீதம் பேர் தங்களது நிதிப் பாதுகாப்பு குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தங்குமிட பிரச்சனையால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக 2/3 பேர் கருத்து தெரிவித்தனர்.
நகர்ப்புறங்களில் அதிகமாக இருந்த வீட்டு வாடகைப் பிரச்னை, வட்டாரப் பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியிருப்பதும் இங்கு தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியா முழுவதும் தற்போதைய உயர் வாடகை விகிதங்கள் அடுத்த ஆண்டு முதல் குறையத் தொடங்கும் என சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.