Sportsதமிழ் முறைப்படி மனைவிக்கு வளைகாப்பு செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

தமிழ் முறைப்படி மனைவிக்கு வளைகாப்பு செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

-

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்-லின் மனைவி வினி ராமனுக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ்ப் பெண்ணான வினி ராமன் ஆகிய இருவரும் 2017ம் ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு இருவருக்கும் வெகு சிறப்புடன் இரு கலாச்சார முறைப்படியும் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல்-லின் மனைவி வினி ராமன் கர்ப்பமாக உள்ள நிலையில், அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை வினி மேக்ஸ்வேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு கீழ் பலரும் தங்களது வாழ்த்தினையும் மகிழ்ச்சியையும் ஏராளமாக பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒருவர், “தமிழ் பொண்ணு” அழகாக உள்ளது, வாழ்த்துக்கள் என கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...