Newsஇலக்கியத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin விருது பெற்ற தமிழ்ப்பெண்

இலக்கியத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin விருது பெற்ற தமிழ்ப்பெண்

-

ஆஸ்திரேலியாவின் இலக்குயத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin விருதினை இம்முறை Chai Times at Cinnamon Gardens என்ற நூலை எழுதியமைக்காக, தமிழ் பின்னணி கொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin, 1957ம் ஆண்டு தொங்கப்பட்டது. இது முதன் முதலாக Patrick White என்பவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் வரிசையில் தமிழ் பின்னணி கொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் அவர்களும் இடம் பிடித்துள்ளமை தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கிறது.

இதை பற்றி மேலும் அவர் கூறுகையில் “Miles Franklin விருதானது எழுத்தாளர்களுக்கு நல்ல மதிப்பை தருவது மட்டுமன்றி, மேலும் இதுபோன்ற நல்ல நூல்களை எழுத உற்சாகத்தையும் தருகின்றது” என்றார்.

சங்கரி சந்திரன் எழுதிய நூல்கள் பற்றி அவர் கூறுகயில், ” எனது முதல் நூலான Song of the Sun God என் பூர்வீக நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்துவதாகவும், Chai Times at Cinnamon Gardens நூலானது நான் புகுந்த நாடான ஆஸ்திரேலியா மீதுள்ள காதலை வெளிப்படுத்துகிறது” என தெரிவித்தார்.

Chai Times at Cinnamon Gardens நாவலானது சிட்னி நகரில் அமைந்துள்ள Cinnamon Gardens என்ற ஒரு முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்கள் மற்றும் அங்கு வேலை செய்கின்றவர்கள் பற்றிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

நீலப்பட நடிகையால் ட்ரம்ப்புக்கு கிடைத்த தண்டனை

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீலப் படங்களில் தோன்றும் நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 105,000 பவுண்டுகள் அல்லது $130,000 செலுத்தியது...

Siri-யின் மீது குற்றம் சாட்டியுள்ள Apple பயனர்கள்

iPhone மற்றும் Apple சாதனங்களுக்கான Siri Option மூலம் தனிப்பட்ட தனியுரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "Hey Siri" விருப்பம் தேவையில்லாத நபர்களுக்கு தங்கள் தொலைபேசிகளில் Siriயுடன்...

விண்வெளியில் செடி வளர்த்து இஸ்ரோ சாதனை

விண்வெளியில் தாவர வளர்ப்புப் பரிசோதனை முயற்சியில், விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், முளைவிட்ட காராமணியில்,...

திடீரென திரும்ப அழைக்கப்படும் இரு KIA கார்கள்

பல மென்பொருள் பிழைகளின் அடிப்படையில் இரண்டு KIA வாகன மாடல்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சந்தைக்கு...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் கோவிட் அபாயத்துடன் பரவும் மற்றொரு நோய்

பண்டிகைக் காலத்தில் குயின்ஸ்லாந்தில் புதிய கொவிட் பரவுவது குறித்து சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, குயின்ஸ்லாந்தில் புதிய கோவிட் விகாரத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஐந்தில் ஒருவர்...

மேகங்கள்மீது நின்ற ஏலியன்கள்

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்லிடத்தொலை பேசியின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற நிலையில் எந்த ஒரு விடயம் நடந்தாலும்...