Newsஅவுஸ்திரேலியா கடற்கரையில் கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்

அவுஸ்திரேலியா கடற்கரையில் கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்

-

டொல்பின் மீன் வகைகளில் அளவில் பெரிய வகையை சேர்ந்தவை பைலட் திமிங்கலங்கள். அவை ஒரு குழுவாக நீந்தி செல்லும்போது, ஒரு திமிங்கலத்தை பின்தொடர்ந்து மற்ற அனைத்தும் ஒன்றாக செல்லும் பழக்கம் உடையவை.

அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்க தொடங்கின.

அவற்றில் 50-க்கும் மேற்பட்டவை நேற்று முன்தினம் உயிரிழந்தது. இந்த திமிங்கல குழு முதல் முதலில் மேற்கு அவுஸ்திரேலியாவின் துறைமுக நகரமான அல்பனியின் செய்ன்ஸ் கடற்கரை பகுதியில் காணப்பட்டது.

மாலையில் திடீரென கரை ஒதுங்க தொடங்கின. உடனே மேற்கு அவுஸ்திரேலியாவின் பல்லுயிர் பாதுகாப்புத்துறை, திமிங்கலங்களை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்தது.

இது குறித்து பல்லுயிர் பாதுகாப்புத் துறையின் மேலாளரான பீட்டர் ஹார்ட்லி தெரிவிக்கையில்,

‘இதுவரை 51 திமிங்கலங்கள் இறந்து விட்டன. இன்னும் 46 திமிங்கலங்கள் உள்ளன. அவற்றை மீண்டும் தண்ணீருக்குள் விட்டுவிட்டு, ஆழமான பகுதிகளுக்கு நீந்திச் செல்ல வைப்பது தான் எங்களது நோக்கம்.

எங்களால் முடிந்தவரை எத்தனை திமிங்கலங்களை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுவோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

திமிங்கலங்களுக்கு உதவும் குழுவில் அவுஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கடல் விலங்கின நிபுணர்கள் உள்ளனர்.

அவர்கள் கப்பல்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி திமிங்கலங்களை கடலுக்குள் விட போராடி வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் உதவ முன்வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அசாதாரண நிகழ்வுக்கு ஏதேனும் நோய் காரணமாக இருக்கலாம் என வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

Augathellaவின் நீர் விநியோக இடமான Charleville-ல் மூளையை உண்ணும் ஆபத்தான அமீபா கண்டுபிடிப்பு

தென்மேற்கு குயின்ஸ்லாந்து ஷையரின் குடிநீர் விநியோக நிலையத்தில் மூளையை உண்ணும் ஒரு அரிய மற்றும் ஆபத்தான அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Charleville மற்றும் Augathella-இற்கான குடிநீரில் Naegleria fowleri என்ற...

உணவுப் பொட்டலத்தில் எடையுடன் கூடிய e எழுத்து என்ன?

உணவுப் பொட்டலத்தில் உள்ள "e" சின்னம் (250 கிராம் e) அதன் எடையுடன் சேர்த்து, கேள்விக்குரிய பொருள் சரியான எடையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...