Newsஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்கு இடையில் தான் போட்டி

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்கு இடையில் தான் போட்டி

-

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் இடம்பெறுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அடுத்த தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெகிறது.

அமெரிக்காவில் பல கட்சிகள் இருந்தாலும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் இடையேதான் ஜனாதிபதி தேர்தலில் எப்போதும் போட்டி இருக்கும்.

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலுக்கு இப்போதே ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன், ராபர்ட் கென்னடி, மரியன்னா வில்லியம்சன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

அதில் ஜோபைடனுக்கு 80 வயது ஆகி விட்டதால் அவருக்கு பதிலாக, தற்போது துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்(58) ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.

குடியரசு கட்சி சார்பில் கடந்த முறை ஜனாதிபதியாக இருந்த டெனால்டு டிரம்ப், பர்கம், கிறிஸ்டி, விவேக் ராமசாமி, டிசாண்டிஸ், நிக்கி ஹாலே, உட்பட 13 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர்.

அதில் டெனால்டு டிரம்ப், விவேக் ராமசாமி இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

டெனால்டு டிரம்ப் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதால் விவேக் ராமசாமிதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமியும்தான் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலை வரும்பட்சத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கு போட்டியிடும் 2 தமிழர்கள் என்று சொல்லலாம். அதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவாராம். மேலும் அவர் வயது வெறும் 37 தான். இவர் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனால் மிகக்குறைந்த வயதுடைய அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையையும் பெறுவார்.

தொழில்முனைவோராக இருக்கும் அவர், தற்போது அமெரிக்க மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிட்டதக்கது.

Latest news

பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை

ஆஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார் , இது காசாவில் அமைதிக்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்று கூறியுள்ளார். "பாலஸ்தீன அதிகாரசபையிடமிருந்து...

ADHD உள்ள குழந்தைகளின் சுகாதார விளைவுகள் குறித்து புதிய ஆராய்ச்சி

சில குழந்தைகளில் Attention Deficit Hyperactivity Disorder (ADHD) அவர்களின் நீண்டகால ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து டீக்கின் பல்கலைக்கழகம் இதுவரை இல்லாத அளவுக்கு...

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொற்றுகள் ஏற்படும் அபாயம்

இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஐந்து பெரியவர்களில் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்குள் தொற்று ஏற்படும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகம்...

உலகை விமானத்தில் சுற்றி வந்த இளைய ஆஸ்திரேலிய மனிதர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இளம் விமானி, உலகம் முழுவதும் விமானத்தில் பறந்த இளைய நபராக மாறத் தயாராகி வருகிறார். பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயது Byron Waller...

இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொற்றுகள் ஏற்படும் அபாயம்

இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஐந்து பெரியவர்களில் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்குள் தொற்று ஏற்படும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகம்...

உலகை விமானத்தில் சுற்றி வந்த இளைய ஆஸ்திரேலிய மனிதர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இளம் விமானி, உலகம் முழுவதும் விமானத்தில் பறந்த இளைய நபராக மாறத் தயாராகி வருகிறார். பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயது Byron Waller...