அடுத்த வாரம் நடைபெறும் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதத்தை மாற்றாமல் தொடர முடிவு செய்யப்படும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அதன்படி, ஆகஸ்ட் மாதம் முழுவதும் ரொக்க விகிதம் தற்போதைய 4.1 சதவீத அளவிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டு அல்லது ஜூன் காலாண்டில் நுகர்வோர் விலைச் சுட்டெண் அதிகரிப்பு 0.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
முந்தைய காலாண்டில் இது 7 சதவீதமாக இருந்தது மற்றும் கடந்த 12 மாதங்களில் பணவீக்கம் 6 சதவீதமாக உள்ளது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கையில் பணவீக்கம் 7.8 சதவீதமாக இருந்தது.
வீட்டு வாடகை உயர்வு மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவை பணவீக்கத்திற்கான முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனால், பணவீக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வட்டி விகிதத்தை அப்படியே பராமரிக்க மத்திய ரிசர்வ் வங்கி தலைவர்கள் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.